தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீடியோ: ஓடும் பேருந்தின் மேற்கூரையில் நின்றுகொண்டு பெண்களிடம் "மான் கராத்தே" போஸ் - மான் கராத்தே

சென்னையில் ஓடும் பேருந்தின் மேற்கூரையில் நின்று இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தின் மேற்கூரை மீது ஏறி இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம்
பேருந்தின் மேற்கூரை மீது ஏறி இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம்

By

Published : Oct 18, 2022, 10:04 AM IST

சென்னை: பிராட்வே முதல் அண்ணா நகர் மேற்கு வரை செல்லக்கூடிய 15 எண் கொண்ட பேருந்தானது நேற்று(அக்.17) கோயம்பேடு வழியாக சென்று கொண்டிருந்தது. கோயம்பேடு மேம்பாலத்தில் செல்லும் போது பேருந்தில் பயணித்த சில பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தின் மேற்கூரையின் மீதும், பக்கவாட்டிலும் ஏறி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

அதிலும் ஒரு இளைஞர் பேருந்தின் மேற்கூரையில் நின்று கொண்டு பெண்களிடம் "மான் கராத்தே" போஸ் கொடுத்து கெத்து காட்டியுள்ளார். இதை பின்புறமாக வந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

பேருந்தின் மேற்கூரை மீது ஏறி இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், காவல்துறையினர் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதே போல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் தொடர்ந்து அபாயகரமாக பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

இவர்களை பிடித்து காவல்துறையினர் கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே பள்ளி, கல்லூரி மாணவர்கள் இது போன்ற விபரீத விளையாட்டில் ஈடுபடமாட்டார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க:’என் அம்மா என்னை அடிச்சுட்டாங்க...!’ காவல் நிலையத்தில் 3 வயது சிறுவன் புகார்...

ABOUT THE AUTHOR

...view details