தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2020, 2:57 PM IST

ETV Bharat / city

மாணவர்கள் தேர்வுக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பொதுத்தேர்வு எழுத வருகைதரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.

sengottaiyan
sengottaiyan

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12ஆம் தேதிவரை நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தேர்வு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டது. மேலும், கரோனா அச்சத்திலிருந்து இன்னும் இயல்புநிலை திரும்பாததால் பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பதிவில், ”மாணவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், வகுப்பறைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தேர்வுக்கு வர வேண்டும்.

மாணவர்கள் தேர்வுக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர்களை அழைத்து வரவும், தேர்வு முடிந்தபின் மீண்டும் அந்தந்தப் பகுதிகளில் சென்றுவிடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது“ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இயல்புநிலை திரும்பும் முன்பே பொதுத்தேர்வா? - ரத்து செய்ய வைகோ கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details