தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர வரும் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - கல்லூரி விண்ணப்பம்

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை மறுநாள்( செப்டம்பர் 22ஆம் தேதி) முதல், அக்டோபர் 3 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்

By

Published : Sep 20, 2022, 7:29 PM IST

சென்னை:இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழ்நாட்டில் 51ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றனர். கடந்த 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு குறித்த அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''2022-2023ஆம் ஆண்டின் மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவம் (பிடிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேர்வதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிடப்பட்டு, 22ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 8,225 இடங்களும், அதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்கள் இடங்கள் 455-ம், பல் மருத்துவப்படிப்பில் 2,160 இடங்களில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 114 பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரியில் 5,050 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி கல்லூரியில் 125 இடங்களும், 20 சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 3,050 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் 848 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1,290 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பட உள்ளன.

பல்மருத்துவப்படிப்பில் 2 அரசு மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரியில் 1,960 இடங்களும் என 2,160 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்பட உள்ளது. அவற்றில் 605 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும், 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் அளிக்கப்பட உள்ளது”, என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details