சென்னை:இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை 80,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே (ஆக. 13) கடைசி நாளாகும்.
இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு ஆன்லைன் பதிவு செய்ய இன்று (ஆக.13) கடைசி நாள். இதுவரை 80 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர். இச்சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்க முடியும்.
கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 13,368 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40 விழுக்காடு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரத்து 992 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட இடங்களைவிட குறைவாக இருந்தால் தகுதிபெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு, சேர்க்கை நடத்தப்படும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்க 80,500 பேர் விண்ணப்பம்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில் இதுவரை 80, 500 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் உரை: மீண்டும் வழங்கப்பட உள்ள ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’!