தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவு - அரசு நீட் பயிற்சி மையம்

சென்னை: அரசு நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.

training
training

By

Published : Jan 30, 2020, 6:09 PM IST

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கில வழியில் அளிக்கப்படும் இந்த நீட் தேர்வு பயிற்சியின் மூலம், மருத்துவப் படிப்பில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதனால் மாணவர்களிடம் நீட் தேர்வு எழுதுவதற்கான ஆர்வம் குறைந்துவருகிறது.

இந்தாண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் வெறும் ஏழாயிரத்து 500 பேர் மட்டுமே பதிவுசெய்துள்ள தகவல் கல்வித் துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அரசு நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் முறையாக நடத்தப்படாததும், பயிற்சியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் 37 ஆயிரம் பேரும், 2019ஆம் ஆண்டில் 19 ஆயிரத்து 355 பேரும், மாணவர்கள் பயிற்சி மையங்களில் பதிவுசெய்திருந்தனர். இந்நிலையில், ஏழாயிரத்து 500 மாணவர்கள் மட்டுமே இந்தாண்டு பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம்: அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details