தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுபான்மையற்ற நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை குலுக்கல்! - சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

சென்னை: சிறுபான்மையற்ற நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

student enrollment
student enrollment

By

Published : Nov 11, 2020, 7:37 PM IST

இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்க்கை பெறுவதற்கு அக்டோபர் 10 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரையிலான நாட்களில் இணையம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு நாளை (நவம்பர் 12) குலுக்கல் நடைபெறவுள்ளது.

எனவே, பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிக்கு நாளை காலை 9:30 மணிக்கை வருகை புரிந்து, குலுக்கலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது". இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details