சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் சுமார் 71 ஆயிரத்து 934 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை:வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவர், இதனை சரி செய்ய மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில் பாடத்திட்டத்தினை மாற்ற தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.