தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுத்தேர்வு முடிவு குறித்த அச்சத்தால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை!

பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும் என்ற அச்சத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

student
student

By

Published : Jun 7, 2022, 2:04 PM IST

சென்னை: சென்னையை அடுத்த நசரத்பேட்டை, நடராஜ் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்(17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்த நிலையில், நேற்றிரவு (ஜூன்6) வழக்கம்போல் அறைக்குள் சென்ற சதீஷ் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

இதனால், பெற்றோர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சதீஷ் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்பு சதீஷ் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில் பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும் என்ற கவலையில் தான் இந்த முடிவு எடுத்ததாகவும், தனது படிப்பிற்காக பெற்றோர் மேற்கொண்டு செலவு செய்வதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - திருச்செங்கோட்டில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details