தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை

நீட் தேர்வு
நீட் தேர்வு

By

Published : Sep 14, 2021, 9:12 AM IST

Updated : Sep 14, 2021, 10:33 AM IST

09:09 September 14

அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தீர்வல்ல

அரியலூர்: சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். 

இதனையடுத்து, மருத்துவ படிப்பில் சேர விரும்பிய மாணவி, நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்நிலையில், செப்.12ஆம் தேதி மானவி கனிமொழி நீட் தேர்வை எழுதினார்.

ஆனால், நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறியுள்ளார். பின்னர், பெரும் மன உளைச்சலில் இருந்த மகளை தந்தை கருணாநிதி தேற்றியுள்ளார்.

தேர்வு பயம்

இருப்பினும் தனது மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், நேற்று (செப்.13) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சில தினங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டார். 

இதையும் படிங்க: தேர்வு பயத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை

Last Updated : Sep 14, 2021, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details