தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாகனம் நிறுத்தும் இடங்களில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை! - சென்னை மாநகராட்சி

வாகனம் நிறுத்தும் இடங்களில் விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Chennai corporation
Chennai corporation

By

Published : Jun 23, 2022, 10:16 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியில் 80 வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அண்மைக் காலமாக முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை எனப் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக காவல் துறையினருடன் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாகன நிறுத்தத்தில் விதிகளை மீறும் நபர்கள் மீதும், கட்டணம் செலுத்தாத நபர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வாகன நிறுத்தங்களில் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு




ABOUT THE AUTHOR

...view details