சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நீட் தேர்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னையில் மொத்தம் 42 இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகின்றன. அதற்கு காவல் துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஐஐடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளேன்" என்றார்.
ஐபிஎஸ் அலுவலர்கள் பெயரில் போலி கணக்கு - குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - chennai police commissioner
சென்னை: சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி ஐபிஎஸ் அலுவலர்கள் மீது அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

chennai-police-commissioner-maheshkumar
காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
அதையடுத்து அவர் ஐபிஎஸ் அலுவலர்கள் பெயரைக் கொண்டு சமூக வலைதளங்களில் பண மோசடி, அவதூறு பரப்புவதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக மத்திய சைபர் குற்றப்பிரிவில் வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காவலர்களுக்கு பிறந்தநாள் பரிசாக விடுமுறை: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு
Last Updated : Sep 13, 2020, 6:48 PM IST