சென்னை போரூர் அருகே அய்யப்பந்தாங்கல் தனலட்சுமி நகரில் அடுத்தடுத்து 7 தெரு நாய்கள் வெவ்வேறு இடங்களில் இறந்து கிடந்தன. இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள், போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் 7 தெரு நாய்களின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
7 தெருநாய்கள் சாவு; கொள்ளையர்களின் சதியா?
சென்னை: போரூர் அருகே ஒரே பகுதியில் அடுத்தடுத்து 7 தெரு நாய்கள் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்
மேலும், செயின் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தெரு நாய்கள் இடையூறாக இருப்பதால் யாரேனும் விஷம் வைத்துக் கொன்றார்களா என, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.