தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்
முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்

By

Published : Dec 14, 2020, 2:29 PM IST

Updated : Dec 14, 2020, 4:06 PM IST

14:13 December 14

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழ்நாடு அரசை விமர்சித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தனக்கெதிரான இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே ஸ்டாலினுக்கு எதிரான சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற வழக்குகளின் விசாரணை இன்று மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது மேடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்தார்.

அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் இது போன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்று கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சனம் செய்வது பொது மக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி கூறினார். 

மேலும், அவதூறு வழக்குகளை ரத்து செய்து வரும் நீதிமன்ற உத்தரவுகளை, தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மற்ற வழக்குகளின் விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: அம்மா மினி கிளீனிக் திட்டம்! - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Last Updated : Dec 14, 2020, 4:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details