தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேகமெடுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி: அடிக்கல் நாட்டும் தேதி அறிவிப்பு! - தமிழகத்துக்கு புதிய மருத்துவ கல்லூரிகள்

சென்னை: தமிழ்நாட்டிற்குப் புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டவுள்ளார். இதற்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

new medical colleges in TN
Stone laying foundation date announced for new medical colleges in TN

By

Published : Feb 15, 2020, 2:07 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க, தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு கேட்டிருந்த ஒன்பது மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டும் தேதியை தற்போது அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி, ராமநாதபுரம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி, மார்ச் 4ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி, மார்ச் 5ஆம் தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரி, அதே நாள் பிற்பகலில் கரூர், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

இதைத்தொடர்ந்து மார்ச் 7ஆம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி, மார்ச் 8ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மார்ச் 14ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மருத்துவக் கல்லூரிகள் அமைக்குப் பணிகள் தற்போது தொடங்கி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details