தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

STFI request:புதிய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்பப்பெற இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

STFI request:புதிய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்பப்பெற வேண்டுமெனவும், புதிய கல்விக்கொள்கையினையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தினை திரும்பப்பெற கோரிக்கை  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு  மார்ச்சில் தேசிய மாநாடு  STFI request  withdraw the new pension scheme  active meeting of stfi
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு

By

Published : Dec 19, 2021, 10:46 PM IST

சென்னை:(STFI request)புதிய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்பப்பெற வேண்டுமெனவும், புதிய கல்விக்கொள்கையினையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்காக டெல்லியில் மார்ச் 6ஆம் தேதி தேசிய அளவிலான கல்விக்கருத்தரங்கம் நடத்திடவும் தீர்மானித்துள்ளது.

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்திற்கு தேசியத் தலைவர் அபித் முகர்ஜி தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி, தேசிய செயல்பாடுகளை விளக்கியும் தீர்மானங்களை முன்மொழிந்தும் பேசினார்.

செயற்குழு கூட்டம்

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டினைச் சார்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் மத்தேயு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக்ரெய்மன்ட் உள்பட 22 மாநிலங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் மாநில அறிக்கையினை சமர்ப்பித்து பேசினார்கள்.

மார்ச்சில் தேசிய மாநாடு

இந்த தேசிய செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்திடக்கோரியும், புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெறக்கோரியும் டெல்லியில் 2022 மார்ச் மாதம் தேசிய மாநாடு நடத்தப்படும்.

முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்தத் தினத்தினையும் தேசிய மகளிர் தினத்தினையும் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:பாஜக - எஸ்டிபிஐ மோதல்: 12 மணிநேரத்தில் 2 கொலை; கேரளாவில் பதற்றம்

ABOUT THE AUTHOR

...view details