தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: ஆலை அமைக்க அனுமதி வழங்கியது ஏன்? - STERLITE CASE

சென்னை: அபாயகரமான தொழிற்சாலை அமைக்க தகுதி இல்லாத சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதி வழங்கியது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைகை கேள்வி எழுப்பினார்.

CASE

By

Published : Aug 13, 2019, 11:23 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை ஆஜராகி வாதாடினார்.

அப்போது, தூத்துக்குடி ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஸ்டெர்லைட் நிறுவனம் திடீரென எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, விவசாய நிலத்தில் அபாயகரமான கழிவுகளை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் வழக்கு தொடர முழு உரிமை உள்ளது என சுட்டிக்காட்டினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

மேலும் இந்தியாவில் அபாயகரமான மாசுப்பாட்டை ஏற்படுத்தும் 17 நிறுவனங்களில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ள நிலையில், ஆலையை எதிர்த்தார்கள் என்பதற்காக 13 அப்பாவி பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

அபாயகரமான தொழிற்சாலை அமைக்க தகுதி இல்லாத சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த 1993ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சிப்காட் பகுதியில் 90விழுக்காடு நிலங்கள் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும், விளக்கமும் அளிக்காததால் பொதுமக்கள் தரப்பில் கேள்வி கேட்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என வாதம் செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details