தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு!

சென்னை: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் எதிர் தரப்பு வாதம் முடிவடையாததால் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By

Published : Aug 19, 2019, 8:40 PM IST

உயர்நீதிமன்றம்

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்க வழக்கறிஞர் யோகேஸ்வரன் சார்பில் சில தகவல்கள் முன்வைக்கப்பட்டன. அவை,

  • ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வரும் புகையினால் காற்று மாசு ஏற்படுவதை கண்காணிப்பாளர்கள் கவனிக்கத்தவறியதால் மாவட்டத்தில் காற்று அதிக அளவில் மாசடைந்துள்ளது.
  • காற்று மாசுப்பாட்டை கண்காணிக்க 12 கண்காணிப்பு நிலையங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவலை வேந்தாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஆலையை சுற்றி வெறும் 7 கண்காணிப்பு நிலையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
  • குடியிருப்பு வட்டாரப் பகுதிகளில் ஒரே ஒரு காற்று மாசுபாடு கண்காணிப்பு நிலையம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மற்ற கண்காணிப்பு நிலையங்கள் தொழிற்சாலை மற்றும் சிப்காட்டில் உள்ள பிற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
  • சில்வபுரம், பாண்டரம்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் எந்தவொரு பகுதியிலும் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை.
  • ஆலைக்கு அருகில் வேதிப்பொருள்களின் அளவு அதிகமாக உள்ளது. இருப்பினும், அந்நிறுவனம் அடுத்தடுத்த பரிசோதனைகளில் வேதிப்பொருள்களில் அளவு குறைவாக உள்ளதாக தெரிவித்துவருகிறது.
  • ஆலையின் EIA எனும் சொந்த அறிக்கையில் 2014ஆம் ஆண்டிற்கான ஸ்டெர்லைட்டின் கண்காணிப்பிற்கான பதிவு செய்யப்பட்ட தரவு மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2018 மார்ச் வரை 721 டன் ஆர்சனிக் தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2017-2018 காலக் கட்டத்தில் 721 டன் ஆர்சனிக் வெளியேறியது என்றால் நாள் ஒன்றுக்கு 2 டன் ஆர்சனிக் வெளியேற்றப்பட்டிருக்கிறது என்று தெரிகின்றது என பல முக்கிய வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் எதிர் தரப்பு வாதம் முடிவடையாததால் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details