சென்னை:திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி, நேற்று (நவம்பர் 15) தூத்துக்குடியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரைச் சந்தித்த, தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள், நடன நையாண்டி மேளம் சங்கத்தினர், சென்னை சங்கமம் (Chennai Sangamam Program) என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்தியதுபோல் மீண்டும் நடத்தக்கோரி அவரிடம் மனு அளித்தனர்.
அவர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட கனிமொழி, இதனை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நாட்டுப்புறக் கலைஞர்கள், ”கடந்த திமுக ஆட்சியின்போது, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் தொடங்கி ஆறு நாள்கள் வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி (Chennai Sangamam Program) நடத்திவந்தோம். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துவந்தது.