மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி, மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் அந்நாளில் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழியினை பள்ளிகளில் ஏற்க வேண்டுமென சமூகநலத்துறை அறிவுரை வழங்கியிருந்தது.
இதனைத்தொடர்ந்து அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியை சரஸ்வதி உறுதி மொழியை வாசிக்க மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.