தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு!

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

commission
commission

By

Published : Dec 27, 2019, 12:38 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருவதையொட்டி, அதுதொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு அவை சென்னையிலுள்ள ஆணையர் அலுவலகத்தின் இணையத்தில் கண்காணிக்கப்படுகிறது.

மொத்த மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 27, மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 515 ( முதல் கட்டம் 260, இரண்டாம் கட்டம் 255), மொத்த ஊராட்சி ஒன்றியங்கள் எண்ணிக்கை 314 ( முதல் கட்டம் 156, இரண்டாம் கட்டம் 158 ), மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 5,090, மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 9,624, மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 76,746 ( முதல் கட்டம் 37830, இரண்டாம் கட்டம் 38916), மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 49,688 ( முதல் கட்டம் 24,680, இரண்டாம் கட்டம் 25008), மொத்த வாக்கு எண்ணிக்கை மையங்கள் 315, போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2,31,890, போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,570 ஆகும்.

வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 4,02,195, தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்ணிக்கை 702, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்ணிக்கை 13,062, மண்டலக் குழுக்களின் எண்ணிக்கை 3,939, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை முதல் கட்டம் 1 கோடியே 30 லட்சம், இரண்டாம் கட்டம் 1 கோடியே 28 லட்சம், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் இதுவரை கண்டறியப்பட்டது 8633, வெப் ஸ்டீரிமிங் கேமரா பொருத்தப்பட்ட வாக்குச் சாவடிகள் 3,260 ( முதல் கட்டம் 1709, இரண்டாம் கட்டம் 1551), வீடியோ கவரேஜ் செய்யப்படும் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 2842, நியமனம் செய்யப்பட்ட நுண் பார்வையாளர்கள் 2,939, மொத்த பறக்கும் படைகள் எண்ணிக்கை 495, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் எண்ணிக்கை - முதல் கட்டம் 60,918, இரண்டாம் கட்டம் 61,004 ஆகும். 9 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 10.4 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது “ எனக் குறிப்பிட்டார்.

பழனிசாமி, மாநிலத் தேர்தல் ஆணையர்

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டபோதும் பதில் ஏதும் கூறாமல் ஆணையர் பழனிச்சாமி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: மதுரை ஒத்தக்கடையில் சலசலப்பு

ABOUT THE AUTHOR

...view details