சென்னை: தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்விற்கு இயற்பியல், வேதியியல், உயிரியியல் ( தாவரவியல், விலங்கியல் ) ஆகியப் பாடங்களில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும் ஒவ்வாெருப் பாடத்திலும் கூடுதல் வாய்ப்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி 20 நிமிடம் வரையில் நடைபெறும். தேர்விற்கான வினாத்தாள்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது ஆகிய 13 மாெழிகளில் அளிக்கப்படும்.