சென்னை:தமிழ்நாடு முழுவதும் கரோனா, ஒமைக்ரான் அதிகரித்துவரும் சூழலில் பரவலைத் தடுக்கும்விதமாக தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் கரோனா உடல் பரிசோதனை மையம் திறக்கும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள 350 படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவரும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் 10 பேர், செவிலியர் உள்பட 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.