தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்குவது, நடப்புக் கல்வி ஆண்டுக்கான கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் பணி உள்ளிட்டவை நாளை (ஜூன் 19) காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவிருக்கிறது.
மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கவிருக்கும் ஸ்டாலின் - சென்னை அண்மைச் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகிய திட்டங்களை நாளை (ஜூன் 19) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைப்பார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்டாலின்
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, நிகழ்ச்சியை தொடங்கிவைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் முழுமையாகச் சுற்றிப் பார்த்து ஆய்வுசெய்வார் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : டெல்லியில் ஸ்டாலின்: இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு