தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று (ஜூன் 30) காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்குச் செல்லவுள்ளார்.
காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர், அண்ணாவின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டு, இல்லத்திலுள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.