தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? - ஸ்டாலின் கண்டனம் - அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கிய பெண்

சென்னை: அதிமுக கொடிக்கம்பத்தால் பெண் ஒருவருக்கு விபத்து நேர்ந்திருப்பது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனுராதா விபத்துக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

By

Published : Nov 12, 2019, 11:21 AM IST

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா, அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில், இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும் அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.

அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அனுராதா, கோல்டுவின்ஸ் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில், அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர், பிரேக் பிடித்தபோது வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலையில், தடுமாறி கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த லாரி அனுராதா கால் மீது ஏறி விபத்து ஏற்படுத்தியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அனுராதாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றவருகிறது.

அனுராதாவுக்கு விபத்து ஏற்பட காரணமாக இருந்த அதிமுகவின் கொடிக்கம்பம், அதிமுக பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்லத் திருமண நிகழ்வுக்காக நாட்டப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: அதிமுகவால் மீண்டும் ஒரு விபத்து... இந்த முறை பேனர் இல்லை கொடிக் கம்பம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details