தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உப்பளத்தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத்தொகை திட்டம் தொடக்கம் - முக ஸ்டாலின்

உப்பளத்தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப்பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நெய்தல் உப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
’நெய்தல் உப்பு’ விற்பனையை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

By

Published : Aug 12, 2022, 4:04 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 5,000 நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிகப்பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”உப்பளத்தொழில் ஒரு பருவகாலத் தொழிலாகும். உப்பளத் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் 9 மாதங்கள் மட்டுமே பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். உப்பளங்கள் கடற்கரை மாவட்டங்களில் அமைந்துள்ளதால், உப்பளத்தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் போதிய மாற்றுப்பணிகள் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் இவர்கள் மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

2021-22ஆம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில், மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத்தொழிலாளர்கள் மாற்றுப்பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

எனவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உடல் உழைப்புத்தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நெய்தல் உப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

அந்த அறிவிப்பின்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், முதலமைச்சர் "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிகப் பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாயமான விலையில் வெளிச்சந்தையில் விற்பனையைத் தொடங்கி வைத்தார். பொது மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெறுவர்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details