தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாயி விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்வாரா? - மு.க.ஸ்டாலின்

சென்னை: குடிமராமத்து திட்டத்தில் ஊழல், கால்வாய்கள் தூர்வாருவதில் ஊழல், பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஊழல் என தன்னை ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்வாரா என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

eps
eps

By

Published : Sep 23, 2020, 3:45 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விளைபொருட்களுக்கு அதிகவிலை கேட்டுப் போராடினாலும், குறைந்தபட்ச ஆதார விலையையாவது கொடுங்கள் என்பதுதான் விவசாயிகளின் தவிப்பாக இருக்கிறது. அந்தக் குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தையே இல்லாத வேளாண் சட்டங்களை, இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்துவிட்டு, அதற்கு ஆதரவாக முதலமைச்சர் பேசியும் வருகிறார் என்றால், அவர் உண்மையிலேயே விவசாயியா? இல்லை ஊரை ஏமாற்ற போட எத்தனிக்கும் வேடமா?

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட இந்தியாவின் 18 அரசியல் கட்சிகள், இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று, குடியரசு தலைவரை கேட்டுக் கொண்டுள்ளனவே, அவர்கள் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதா?

குடிமராமத்து திட்டத்தில் ஊழல், கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல், பிரதம மந்திரி கிசான் திட்டத்திலும் ஊழல். ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்ய மாட்டார். எந்த மனிதரும் தனது சொந்த வீட்டிலேயே கன்னக்கோல் போடமாட்டார். முதலமைச்சர் விவசாயி என்று சொல்வதற்கு தார்மிக உரிமையை இழந்துவிட்டார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்கள் சேர்க்கை: புதிய பள்ளிகளை தொடங்குவது குறித்து செப். 28இல் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details