விடுதலைப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரனின் 63ஆவது நினைவுநாளை முன்னிட்டு, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், அவரது உருவப்படத்திற்கு மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, க. பொன்முடி, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, தனது 18ஆவது வயதில் கைதாகி, தாய்த்திருநாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன்.
தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள ஆறு உள்பிரிவுகளையும் ஒன்றிணைத்து அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளான இன்று, இக்கோரிக்கையை உரிய முறையில் பரிசீலித்து தீர்வினை விரைவில் கண்டிட வேண்டும் என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும், மத்திய அரசையும் தொடர்ந்து திமுக வலியுறுத்தும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருவாரூரில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் பங்கேற்கத் தடை!