தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வசந்தகுமாருக்கு மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி! - வசந்த குமார்

சென்னை: மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

congress
congress

By

Published : Aug 31, 2020, 12:43 PM IST

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெச். வசந்தகுமார், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நேற்று (ஆகஸ்ட் 30) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வசந்தகுமாருக்கு மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி!

அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மூப்பனாரின் 19ஆவது நினைவு நாள்: 'அவரது நற்குணங்களை அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details