தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இணையவழி இலவச பட்டாக்களை வழங்கினார் ஸ்டாலின் - இணையவழி இலவச பட்டா

விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இணையவழி இலவச பட்டாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இணையவழி இலவச பட்டாக்களை வழங்கினார் ஸ்டாலின்
இணையவழி இலவச பட்டாக்களை வழங்கினார் ஸ்டாலின்

By

Published : Apr 4, 2022, 2:09 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விளிம்பு நிலையிலுள்ள 12,563 நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கும் மற்றும் 2,35,890 ஆதிதிராவிடர், பழங்குடியினர், 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அடையாளமாக 10 நபர்களுக்கு இணையவழி பட்டாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் காவல் உதவி செயலியை தொடங்கி வைத்தார்.

இணையவழி இலவச பட்டாக்களை வழங்கினார் ஸ்டாலின்

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல்பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க:காவல் உதவி செயலி தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details