தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘தமிழகத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்’ - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்! - CM stalin

தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

By

Published : Sep 20, 2021, 5:00 PM IST

சென்னை:தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி முகாம் மூலம் கடந்த 12ஆம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், நேற்று (செப்.19) 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசும் இதுவரை தமிழ்நாட்டிற்கு 3.97 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்கு, வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட 2 லட்சம் தடுப்பூசிகள்

ABOUT THE AUTHOR

...view details