தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் - central government

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

By

Published : Jun 22, 2021, 12:33 PM IST

Updated : Jun 22, 2021, 7:08 PM IST

12:31 June 22

ஒன்றிய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு கடலோர மாநிலங்களை சேர்ந்த 9 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், கோவா உள்ளிட்ட கடலோர மாநிலங்களை சேர்ந்த 9 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்த  ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

மாநிலங்களுக்கான அதிகாரங்களை நீர்த்து போகசெய்யும் முயற்சியை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒன்றிய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் மாநில முதலமைச்சர்களை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கும் புதிய சட்டம், சிறு துறைமுகங்களை கையாளும் மாநிலங்களின் அதிகாரங்களை நீர்த்துப் போக செய்யும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதையும் படிங்க :16 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி- கூட்டுறவு துறை அமைச்சர்

Last Updated : Jun 22, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details