தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சியில் வணிகர் சங்க மாநாடு - ஸ்டாலின் பங்கேற்கிறார்

திருச்சியில் மே 5ஆம் தேதி நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கோயம்பேடு வணிகவளாக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாங்காவை ரசாயனம் வைத்து பழுக்க வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!
மாங்காவை ரசாயனம் வைத்து பழுக்க வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

By

Published : May 3, 2022, 7:15 AM IST

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கோயம்பேடு வணிகவளாக காய், கனி, மலர் உணவுதானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராஜேந்திரன்,"கோயம்பேடு மார்கெட்டில் ரூ.33 கோடி சிமெண்ட் ரோடு போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.25 கோடியில் சுற்றுலா பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாட்டு நிதியாக ரூ.45 கோடி வழங்கிய முதலைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். திருச்சியில் மே 5ஆம் தேதி நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். வணிகர் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களின் சங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

முதலமைச்சரிடம் கோரிக்கை: மே 5ஆம் தேதி சந்தையில் உள்ள 3,942 கடைகளும் அடைக்கப்படும். சந்தையிலிருந்து10,000 பேர் மாநாட்டில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து நிறுத்தும் 18 ஏக்கர் இடமானது கோயம்பேடு சந்தைக்கு சொந்தமானது. அதை மாற்றுவதற்கு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

முதல் முறையாக மே 5்ஆம் தேதி வணிகர்களுக்கு விடுமுறை அளித்துள்ளோம். உரிய உரிமம் இல்லாமல் விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது சட்டத்திற்கு புறம்பானது. காய்கறி கழிவுகளை அப்புறபடுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மாங்காய் பழுக்க வைக்க சிறிதளவு ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. மாங்காய் வரத்து அதிகரிப்பால் எங்களுக்கு வேற வழி இல்லை. இது அவ்வளவு பெரிய தவறு கிடையாது. கோயம்பேடு சந்தைக்கு அதிக வேலை ஆள்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆள்கள் குறைவாக இருப்பதால், வடமாநிலத்திலிருந்து ஆள்களை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மொத்த வியாபாரத்தையும் சந்தையில் விற்பனை செய்வது தொடர்பாக இருக்கின்ற சட்டத்தை பின்பற்ற வேண்டும். கொத்தவால் சாவடியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 1996ஆம் ஆண்டு மாற்றுவதற்கு சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால், இன்னும் இந்த சட்டம் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை. திருச்சி மாநாட்டில் முதலமைச்சரிடம் இதுபோன்ற பல கோரிக்கைகளை வைக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தேசிய மருத்துவக் கழக பரிந்துரையின்படியே உறுதிமொழி எடுக்கப்பட்டது' - மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details