தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் வேட்பாளர் எங்களுக்கு ஸ்டாலின்! - அதிமுக அணியில் யார்? - அழகிரி கேள்வி! - அதிமுக கூட்டணி

சென்னை: எடப்பாடி பழனிசாமியை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளாரா என காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.

alagiri
alagiri

By

Published : Mar 6, 2021, 12:55 PM IST

சென்னை அயனாவரத்தில் திமுக சார்பில், ’ஒன்றெனக் கூடுவோம்; உதயத்தை பாடுவோம்’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேடையில் பேசிய அழகிரி, ”கலைஞர் இருந்தபோது பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இதனை எடப்பாடி பழனிசாமியும், ராமதாசும் மறுத்துவிட முடியுமா? இன்றைக்கு எடப்பாடி அரசாங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்கின்ற தவறான பிரச்சாரத்திற்கு எதிராக நாம் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, உலக அரங்கில் 108 டாலராக இருந்தது. ஆனால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அன்றைக்கு 71 ரூபாய்க்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி காலத்தில், உலக அரங்கில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 54 டாலராக உள்ளது. பெட்ரோலின் விலை 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எது மக்களுக்கான அரசாங்கம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

முதலமைச்சர் வேட்பாளர் எங்களுக்கு ஸ்டாலின்! - அதிமுக அணியில் யார்? - அழகிரி கேள்வி!

தமிழகத்தில் இன்று சுயமரியாதை இல்லாத அரசு ஆட்சி செய்து வருகிறது. எனவே இந்த அரசு நம்மை ஆள்வதற்கு தகுதியற்ற அரசு. அதனால்தான் நாங்கள் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் என அழுத்தம் திருத்தமாக கூறுகிறோம். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி, கூட்டணி கட்சிகள் வரை, எடப்பாடி பழனிசாமியை இதுவரை முதலமைச்சர் வேட்பாளராக முழுமனதோடு ஒத்துக்கொள்ளவில்லை. பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என ராமதாஸ் இன்று வரை கூறியுள்ளாரா?” என்றார்.

இதையும் படிங்க: காங்கிரசிற்கு குறைவான தொகுதிகள் தரும் கட்சிதான் பாஜகவின் ’பி’ டீம்! - கமல்

ABOUT THE AUTHOR

...view details