தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்கள் ஆகிவிட்டது - துரைமுருகன் - அரசியல் வெற்றிடம் குறித்து துரைமுருகன்

சென்னை: அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்கள் ஆகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Duraimurugan

By

Published : Nov 8, 2019, 2:28 PM IST

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், "வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. தொடர்ந்து அரசியலில் ரஜினி இருந்திருந்தால், அவருக்கு இது தெரிந்திருக்கும்.

நீண்ட படப்பிடிப்பில் இருப்பதால் தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பம் அவருக்குச் சரியாகப் புரியவில்லை என்று பொருள். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் இதைப் புரிந்துகொள்வார்.

துரைமுருகன்

வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞான தத்துவம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது" என்று கூறினார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் தற்போதும் ஆளுமைமிக்க அரசியல் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

துரைமுருகன்

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் உள்ளது: ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details