தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? மு.க. ஸ்டாலின் ஆலோசனை! - ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.

Stalin
Stalin

By

Published : Jul 2, 2021, 9:48 AM IST

சென்னை : தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அப்போது, நோய்த்தொற்றின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டன. முதல் வகையில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.

இதற்கிடையில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது ஊரடங்கை மேலும் நீட்டிப்பது, தளர்வுகளை அறிவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். கட்டுப்பாடு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் இ-பாஸ் இன்னமும் நடைமுறையில் உள்ளது.

பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 40 ஆயிரம் பேருக்கு பணி- ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிநிரந்தரம்- சேகர் பாபு

ABOUT THE AUTHOR

...view details