பெண்கள் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மார்ச் - 8 உலக உழைக்கும் மகளிர் தினம்! சமூகத்தின், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பெண்ணைப் போற்றுதலில் இல்லை பெருமை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம். உரிமை என்பது கொடுப்பது அல்ல; அவர்களாகவே எடுத்துக் கொள்வதில் இருக்கிறது. "இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம் உலகுக்கு! பெண்ணே வாழ்க!" என்று பெண்கள் தினத்திற்கு தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.