சென்னை:கரோனா தொற்றின் காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்ச்சி எனப் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '2020-21ஆம் கல்வியாண்டில் படித்து மார்ச் 2021ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.