கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ஆதிகேசவபெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் புடைசூழ ஸ்ரீராம-சீதா திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது
பல மதங்கள் வாழும் இந்த உலகில் இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு, வணங்கும் கடவுளுக்கு திருமணம் செய்து வைப்பதாகும். அப்படி, உளுந்தூர்பேட்டை அருள்மிகு கனகவள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, முக்கடவுள்களில் காத்தல் கடவுளான ஆதிகேசவ பெருமாளின் அவதாரமான ஸ்ரீ ராமர்-சீதாவுக்கு திருக்கல்யாணம் பக்தர்கள் புடை சூழ இனிதே நடைபெற்று முடிந்தது.
மார்கழி மாத உற்சவத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை, ஆண்டாளின்(மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்) திருப்பாவையை பஜனையுடன் பாடிச்செல்வது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
உளுந்தூர்பேட்டை அருகே திருப்பதி போன்ற வடிவமைப்பில் சிறிய திருப்பதி கோயில் கட்டுவதற்காக போதுமான இடம் முன்னாள் அதிமுக அரசால் அளக்கப்பட்டுள்ளதாகவும்; தற்போது இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும்; மீண்டும் கோயில் கட்டப்படுமா என்பதும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதையும் படிங்க:தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்களை கவர்ந்த இளைஞர்களின் கம்பத்து ஆட்டம்