வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார். இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
'63 ஆண்டுகளாக கமல் மக்களோடுதான் இருக்கிறார்' - ஸ்ரீபிரியா - Sripriya byte
சென்னை: "63 ஆண்டுகளாக கமல் ஹாசன் மக்களோடுதான் இருக்கிறார். மக்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு அனைவருக்கும் தெரிந்ததே" என மநீம வேட்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
!['63 ஆண்டுகளாக கமல் மக்களோடுதான் இருக்கிறார்' - ஸ்ரீபிரியா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11045922-thumbnail-3x2-aa.jpg)
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அனைவரின் மனதில் இருக்கும் மாற்றம் தேவை என்ற எண்ணம், எனக்குள்ளும் இருக்கிறது. ஒரு மாற்றம் தேவை என்றால் என்ன மாதிரியான தவறுகள் நடைபெறுகிறது என்பதை ஊடகங்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.
மநீம மயிலாப்பூர் வேட்பாளர் ஸ்ரீபிரியா பேட்டி