தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்! - srilankan airlines

சென்னை: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால், விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை விமானம் நிலையம்

By

Published : Nov 23, 2019, 2:01 PM IST

டெல்லியிலிருந்து இலங்கைக்கு 184 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இலங்கையைச் சோ்ந்த மாா்க்கிரேட் (74) என்ற பெண் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அதிகாலை 4.30 மணியளவில், விமானம் நடுவழியில் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனயைடுத்து, உடனடியாக இலங்கைப் பயணி மாா்க்கிரேட் சென்னை விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பின்னர், மற்றப் பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் காலை 6.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டுச்சென்றது.

மேலும் படிக்க: விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட மாரடைப்பு - பெண் பரிதாப உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details