சென்னை: இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது, திருச்சியை சேர்ந்த ஜெசிந்தா மேரி பிரான்சிஸ் (25) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடைமைகளை சோதனையிட்டதில், அவர் தனது உடைமைகளிலும் உள்ளாடையிலும் தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பசைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.