இதில் 250 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவியாக பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக வளர்ச்சி நிறுவன இயக்குநர் ஜோசப் லூயிஸ் பரிசுகளை வழங்கினார்.
விளையாட்டு போட்டி - மாற்றுத்திறன் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! - மாற்றுத்திறன் மாணவர்கள்
சென்னை: பரங்கிமலையில் உள்ள மான்ஃபோர்டு சமூக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் 10ஆவது ஆண்டு மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
sports
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப் லூயிஸ், ” மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் மாணவர்களும், மற்ற மாணவர்களும் இடையே நட்புணர்வு ஏற்படும் வகையிலும், அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன ” என்றார்.
இதையும் படிங்க: 600 காளைகள், 500 காளையர்கள்: களைகட்டிய குமாரபாளையம்!