சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆங்கிலம் படிப்பதில் எழுதுவதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இல்லை என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பின்தங்கும் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு செல்லுகின்ற போது மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது ஒருவித தாழ்வு மனப்பான்மையை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனை ஆரம்ப நிலை வகுப்புகளில் இருந்தே சரி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதனடிப்படையில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் "அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர், பட்டதாரி ஆங்கில ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர் உள்ளிட்டவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தேர்வு செய்ய வேண்டும்.