தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை - ரேணிகுண்டா இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை - ரேணிகுண்டா மார்க்கத்தில் நாளை (டிசம்பர் 12) 130 கி.மீ அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

By

Published : Dec 11, 2020, 10:01 PM IST

Speed train trial
Speed train trial

சென்னை-ரேணிகுண்டா மார்க்கத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்த தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக சோதனை ஓட்டத்தில் பயணிகள் ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்கும் வகையில் இருப்புப்பாதையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆர்.டி.எஸ்.ஓ மூலம் நடத்தப்படும் இந்த சோதனை ஓட்டமானது நாளை (டிசம்பர் 12) நடைபெற உள்ளது.

சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே மதியம் 01:00 முதல் 02:30 மணி வரையிலும், மற்றும் ரேணிகுண்டா - சென்னை சென்ட்ரல் இடையே மாலை 03:30 மணி முதல் 05:00 மணி வரையிலும் இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

எனவே சென்னை - ரேணிகுண்டா மார்க்கத்தில் உள்ள ரயில்பாதை அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்கவோ அல்லது அதன் அருகே நடந்து செல்லவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலூரை கலங்கடித்த 'பிரியாணி' கொலை!

ABOUT THE AUTHOR

...view details