தீபாவளிப் பண்டிகை வரும் நவ.14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்நாளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க, கூடுதல் சிறப்பு வார்டுகள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் கூடுதல் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. இதனிடையே, தீபாவளி அன்று பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகள்
- குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
- பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிப்பது நல்லது
- செருப்பு அணிய வேண்டும்
- அருகில் ஒரு வாளி தண்ணீர் இருக்க வேண்டும்
- பட்டாசுகளை கொளுத்துவதற்கு நீண்ட மத்தாப்பு ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்
பட்டாசு வெடிப்பினால் ஏற்படும் தீக்காயங்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள்
- தீக்காயம் பட்ட இடத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்
- எரிச்சல் குறையும் வரை நீரில் வைத்திருக்க வேண்டும்
- ஐஸ்கட்டி வைக்கக்கூடாது
- மஞ்சள், காப்பித்தூள், மை, மாவு போன்றவற்றை தீப்புண் மேல் போடக்கூடாது
- ஒட்டியிருக்கும் எரிந்த துணியை வெட்டி எடுக்கவும்
- மோதிரம் போன்ற நகைகளை எடுத்து விடவும்
- தீயை அணைக்க தண்ணீர், மண் உபயோக்கிக்கவும்
- கொப்பளங்களை உடைக்க வேண்டாம்
- சுயமாக மருத்துவம் செய்ய வேண்டாம்
- தகுந்த மருத்துவ உதவியை நாடவேண்டும்
இதையும் படிங்க:தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்குத் தடை!