தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பக்கவாத நோயை குணப்படுத்த அரசு மருத்துவமனைகளில் அகநாள சிகிச்சை' - stroke recovery treatment in tamil

பக்கவாத நோயை குணப்படுத்த உதவும் அகநாள சிகிச்சையினை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

special-treatment-for-stroke-patients-in-government-hospitals-said-minister-ma-subramanian
special-treatment-for-stroke-patients-in-government-hospitals-said-minister-ma-subramanian

By

Published : Mar 17, 2022, 9:32 AM IST

சென்னை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று பக்கவாத நோய், குருதி உறைவு நீக்கத்திற்கான பயிலரங்கம் நடந்தது. இதனை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேரில், 130 பேருக்கு ஆண்டுதோறும் பக்கவாத நோய் ஏற்படுகிறது.

மூளையில் குருதி கசிவு, உறைவு ஏற்படுவதே உயிரிழப்பு காரணம். இந்த குருதி உறைவு ஏற்பட்ட உடன் 3 மணி நேரத்திற்குள் நோயாளி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டால், பக்கவாத முடக்கு இல்லாமல் நோயாளியை மீட்க முடியும். ஆனால் 95 விழுக்காடு நோயாளிகள் தாமதமாகவே மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர்.

எனவே பக்கவாத நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு திட்டத்தின்கீழ், பபக்கவாத நோயை குணப்படுத்தும் உதவும் மூளை குருதி உறைவு நீக்க அகநாள சிகிச்சையினை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

அதற்காக 9 மருத்துவக்கல்லூரிகளின் பயிரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நுண்துளை இடையீட்டு கதிரியக்க சிகிச்சை பிரிவினை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வளப்படுத்தப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் செலுத்திய தடுப்பூசிகள் டோஸ் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது;மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details