திருப்புகழ் திருப்பதியை முன்னிட்டு அரக்கோணம்- திருத்தணி இடையே டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருத்தணி-அரக்கோணம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - special train arakonam thiruthani
சென்னை: திருப்புகழ் திருப்பதியை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
![திருத்தணி-அரக்கோணம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு special train arakonam thiruthani, திருத்தணி அரக்கோணம் சிறப்பு ரயில்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5515970-thumbnail-3x2-arakonam-thiruthani-special-train.jpg)
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்புகழ் திருப்பதியை முன்னிட்டு அரக்கோணத்தில் இருந்து டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரயில் திருத்தணிக்கு 10.30 மணிக்கும், திருத்தணியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும்.
அதேபோல், அரக்கோணத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.40 மணிக்கு திருத்தணிக்கும், திருத்தணியில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு இரவு 12.10 மணிக்கு சென்றடையும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.