ஃபானி புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த இரண்டு நாட்களாக அறிவித்து வந்தது. இதனால் பல்வேறு ரயில்சேவைகள் ரத்தானதால் பயணிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-ஷாலிமர் சிறப்பு ரயில் வண்டி எண்: 06166 நாளை மாலை 4.25 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில் மே 6 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு கொல்கத்தா மாநிலம் ஷாலிமர் சென்று அடையும்.