தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கை வசதி

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

special-sleeper-seat-for-woman-in-tamilnadu-government-bus
special-sleeper-seat-for-woman-in-tamilnadu-government-bus

By

Published : Apr 1, 2022, 9:43 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதி கொண்ட குளிர் சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதிகொண்ட / குளிர்சாதனம்/ குளிர்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் எண் 1LB மற்றும் 4 LB ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்யும் பெண் பயணிகளுக்கு, அதனை ஒதுக்கீடு செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் அதனை பொதுப்படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள் பின்பற்றவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி- தமிழ்நாடு அரசு அரசாணை

ABOUT THE AUTHOR

...view details